December 12, 2024
தேசியம்
செய்திகள்

ஏனைய கட்சிகளை விட அதிக நன்கொடைகள்  திரட்டும் Conservative கட்சி

Conservative கட்சி இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஏனைய கட்சிகளை விட அதிக நன்கொடைகள்  திரட்டியுள்ளது.

Conservative கட்சி Liberal கட்சியை விட 2023 முதல் காலாண்டில் 5 மில்லியன் டொலர்கள் நிதியை அதிகம்  திரட்டியுள்ளது.

Conservative கட்சி 8.3 மில்லியனுக்கும் அதிகமான நிதி திரட்டியதை கனடிய தேர்தல் திணைக்கள அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

46 ஆயிரம் வரையிலான நன்கொடையாளர்களிடமிருந்து இந்த நிதியை Conservative கட்சி  திரட்டியுள்ளது.

Liberal கட்சி அதே காலகட்டத்தில் 31 ஆயிரம் நன்கொடையாளர்களிடமிருந்து சுமார் 3.6 மில்லியன் டொலர்களை திரட்டியுள்ளது.

புதிய ஜனநாயகக் கட்சி சுமார் 16 ஆயிரம் நன்கொடையாளர்களிடமிருந்து 1.3 மில்லியன் டொலர்களை திரட்டியது.

பசுமைக் கட்சி 401 ஆயிரம் டொலர்கள், Bloc Quebecois 322 ஆயிரம் டொலர்கள், மக்கள் கட்சி 296 ஆயிரம் டொலர்களை திரட்டியன.

Related posts

தொற்றின் பரவல் அதிகமாக உள்ள நாடுகளின் விமானங்களை கனடா நிறுத்த வேண்டும் – தொடரும் கோரிக்கைகள்!

Gaya Raja

AstraZeneca தடுப்பூசியை பெற்றுக் கொண்ட Quebec பெண்ணுக்கு இரத்த உறைவு!

Gaya Raja

கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்: அமெரிக்கா!

Gaya Raja

Leave a Comment