Stanley Cup Playoffs தொடரின் இரண்டாவது சுற்றுக்கு Edmonton Oilersஅணி தகுதி பெற்றுள்ளது.
சனிக்கிழமை (29) நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், Stanley Cup Playoffs தொடரில் இரண்டாவது சுற்றுக்கு Edmonton Oilers அணி தகுதி பெற்றுள்ளது.
முதலாவது சுற்றில் Pacific பிரிவில் Edmonton Oilers அணி Los Angeles Kings அணியை எதிர்கொண்டது.
மொத்தம் ஏழு ஆட்டங்கள் கொண்ட முதல் சுற்றில் நான்கு ஆட்டங்களில் Edmonton Oilers அணி வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
Toronto Maple Leafs, Edmonton Oilers, Winnipeg Jets ஆகிய மூன்று கனடிய அணிகள் இம்முறை Stanley Cup Playoffs தொடருக்கு தகுதி பெற்றன
இவற்றில் இரண்டாவது சுற்றுக்கு Toronto Maple Leafs அணி தகுதி பெற்றுள்ளது.
Winnipeg Jets அணி ஏற்கனவே இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.