February 21, 2025
தேசியம்
செய்திகள்

சூடானில் இருந்து 100 கனடியர்கள் வெளியேற்றம்!

சூடானில் இருந்து இதுவரை வெளியேறியுள்ள கனடியர்களின் எண்ணிக்கை 100 என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

கனேடியர்களை வெளியேற்ற உதவிய ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியாவிற்கு ஆகிய நாடுகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

சூடானில் தங்கியிருப்பதாக பதிவு செய்யப்பட்ட 1,700 கனேடியர்களில் செவ்வாய்க்கிழமை (25) வரை வெளியேறியதாக அறிவிக்கப்படும் 100 பேரும் அடங்குவதாகவும் அமைச்சர் கூறினார்.

இவர்களில் 550 பேர் நாட்டை விட்டு வெளியேற உதவி கோரியுள்ளதாக அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

சொந்தமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் கனடியர்களுக்கு கனடிய அரசாங்கம் தகவல் வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

Related posts

Toronto Blue Jays அணியின் முதலாவது ஆட்டம்

Lankathas Pathmanathan

கனடாவுக்கான ஸ்ரீலங்காவின் தூதுவராக சுமங்கல டயசை பரிந்துரைக்கும் இலங்கை அரசின் கோரிக்கையை நிராகரியுங்கள் – கனடிய அரசாங்கத்திடன் NCCT வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

மூன்று GM தொழிற்சாலைகளில் மறியல் போராட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment