February 22, 2025
தேசியம்
செய்திகள்

பொது சேவை ஊழியர் சங்கத்தின் முதலாம் நாள் வேலை நிறுத்தம்

பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் புதன்கிழமை (19)ஆரம்பமானது.

அரசாங்கத்திற்கும் கனடாவின் பொதுச் சேவை கூட்டணிக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை (18) உடன்பாடு எட்டப்படாத நிலையில் மத்திய பொது ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒன்றை புதன்கிழமை ஆரம்பித்தனர்.

இதன் மூலம் சுமார் 155 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில் கனடா வருவாய் முகமை துறையை சேர்ந்த 35 ஆயிரம் தொழிலாளர்களும் அடங்குகின்றனர்.

இருப்பினும், இவர்களில் சுமார் 48 ஆயிரம் பேர் அத்தியாவசியமானவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.

இதன் காரணமாக அவர்கள் தொடர்ந்தும் பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது

இந்த நிலையில் கனேடியர்களுக்கான நீண்ட கால சேவை இடையூறுகளைத் தடுக்க ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மத்திய அரசாங்கம் அழுத்தங்களை எதிர்கொள்கிறது.

Related posts

உக்ரைனுக்கு ஆதரவான ஒற்றுமை பேரணியில் பங்கேற்ற கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

தேசிய பாடசாலை உணவு திட்டத்தை உருவாக்கும் மத்திய அரசு

Lankathas Pathmanathan

கனடாவின் பல்வேறு பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment