பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் குறித்து நாடாளுமன்ற அமர்வில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.
சுமார் 155 ஆயிரம் பொதுச் சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தம் பிரதமரின் திறமையின்மையின் முழுமையான விளைவு என பிரதான எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Stephanie Kusie புதன்கிழமை (19) இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார் .
இந்த விடயம் குறித்து புதிய ஜனநாயக கட்சியும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசாங்கம் பொதுச் சேவை கூட்டணியுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டியிருக்க வேண்டும் என NDP தலைவர் Jagmeet Singh கூறினார்.