தேசியம்
செய்திகள்

பொதுச் சேவைக் கூட்டணியின் வேலை நிறுத்தம்

கனடாவின் பொதுச் சேவைக் கூட்டணி வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுக்கிறது என கனடாவின் மிகப்பெரிய மத்திய பொது சேவை சங்கம் கூறுகிறது.

அரசாங்கத்திற்கும் கனடாவின் பொதுச் சேவைக் கூட்டணிக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை (18) இரவு 9 மணிக்கு உடன்பாடு எட்டப்படாத நிலையில் மத்திய பொது ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர்.

செவ்வாய் இரவு 9 மணிக்குள் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், புதன்கிழமை (19) நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்தம் ஆரம்பமாகும் என மத்திய அரசின் பொது சேவைகள் சங்கம் ஏற்கனவே கூறியிருந்தது

இதன் மூலம் சுமார் 155 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கின்றனர்.

இதில் கனடா வருவாய் முகமை துறையை சேர்ந்த 35 ஆயிரம் தொழிலாளர்களும் அடங்குகின்றனர்

கடந்த வெள்ளிக்கிழமை முதல் 155 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மத்திய பொது ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடிய சட்டப்பூர்வ நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வேலை நிறுத்தம், வரிச் செயலாக்கம், கடவுச்சீட்டு புதுப்பித்தல், வேலை வாய்ப்பு காப்பீடு, சமூகக் காப்பீடு விண்ணப்பங்கள், கனடா ஓய்வூதியத் திட்ட விண்ணப்பங்கள், சுதேச சேவைகள், படைவீரர் விவகாரங்கள் சேவைகள் உட்பட பல மத்திய அரசின் சேவைகளை பாதிக்கும் நிலை தோன்றியுள்ளது.

Related posts

Manitobaவில் எல்லை முற்றுகை அகற்றப்படும்: RCMP நம்பிக்கை

Lankathas Pathmanathan

அரசாங்கத்தை வெற்றி கொள்ளும் முயற்சியில் எதிர்க்கட்சி!

Lankathas Pathmanathan

உகாண்டாவிற்கு 2 மில்லியன் COVID தடுப்பூசிகளை வழங்கிய கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment