Ontarioவின் கல்வி முறையை நவீனமயமாக்கும் நோக்கத்துடன் Ontario மாகாணம் திங்கட்கிழமை (17) புதிய சட்டமூலம் ஒன்றை அறிவித்தது.
The Better Schools and Student Outcomes Act என்ற தலைப்பில் இந்த சட்டமூலம் அறுமுகப்படுத்தப்பட்டது.
கல்வி அமைச்சர் Stephen Lecce இந்த சட்டமூலத்தை அறிவித்தார்.
Ontarioவின் 72 பாடசாலை வாரியங்களில் நிலைத்தன்மை, வெளிப்படைத்தன்மையை உருவாக்க இந்த சட்டமூலம் இடமளிக்கிறது.
கணிதம், கல்வியறிவை அதிகரிப்பதற்காக மாகாணம் 1,000 புதிய ஆசிரியர்களை நியமிக்கும் என ஞாயிற்றுக்கிழமை (16) கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆசிரியர் பணி அமர்வுக்காக 180 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.