வடகிழக்கு சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 கனேடியர்கள் வியாழக்கிழமை (06) நாடு திரும்பினர்.
கனடிய வெளிவிவகார அமைச்சு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியது.
Al-Roj திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கனேடிய பெண்களும் அவர்களது 10 குழந்தைகளும் மீண்டும் கனடா திரும்பியுள்ளனர்.
அவர்கள் அமெரிக்க இராணுவ விமானத்தில் சிரியாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அந்த விமானம் ஜெர்மனியில் முதலில் தரையிறங்கியது.
பின்னர் கனடியர்கள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டு கனடா நோக்கி பயணித்தனர்.