Alberta மாகாணத்தின் இரண்டு முக்கிய அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.
நிதியமைச்சர் Travis Toews, சுற்றுச்சூழல் அமைச்சர் Sonya Savage ஆகியோர் எதிர்வரும் May மாதம் நடைபெறும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.
இவர்கள் இருவரும் முதலில் மாகாணசபை உறுப்பினர்களாக 2019ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டனர்.