February 16, 2025
தேசியம்
செய்திகள்

Parking அமுலாக்க அதிகாரி மீதான தாக்குதல் விசாரணையில் தமிழர் கைது

Toronto காவல்துறையின் Parking அமுலாக்க அதிகாரி மீதான தாக்குதல் விசாரணையில் தமிழர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

41 வயதான நிசாந்தன் சத்தியபால் என்பவர் இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.

கடந்த திங்கட்கிழமை மதியம் அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

வாகனம் ஒன்று சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டதை கவனித்து, Parking அமுலாக்க அதிகாரி விதிமீறல் தண்டனை சீட்டை வழங்க முற்பட்ட போது அவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட நிசாந்தன் சத்தியபால் Toronto காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இவர் தன் மீதான குற்றச்சாட்டை எதிர்வரும் April மாதம் 6ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளார்.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

முற்றுகை போராட்டத்தின் போது பிரதமருக்கு மரண அச்சுறுத்தல்!

Lankathas Pathmanathan

Ana Bailãoவுக்கு ஆதரவு தெரிவிக்கும் John Tory!

Lankathas Pathmanathan

தமிழர் தெருவிழாவை நடத்தும் தார்மீக அதிகாரம் CTCக்கு இல்லை: கனேடியத் தமிழர் கூட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment