வேலைவாய்ப்பு காப்பீடு பெறும் கனடியர்கள் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த எண்ணிக்கை 44 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது.
January யில், 375 ஆயிரம் கனடியர்கள் EI எனப்படும் வேலைவாய்ப்பு காப்பீட்டை பெற்றனர்.
இது December 2022 ல் இருந்து 20 ஆயிரம் அல்லது ஐந்து சதவீதம் குறைந்துள்ளது.
1997 ஆம் ஆண்டின் பின்னர் EI பெறுபவர்களின் எண்ணிக்கை இதுவே மிகக் குறைவானது என புள்ளி விபரத் திணைக்களம் கூறுகிறது.
January யில் EI பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையும் முந்தைய ஆண்டை விட 44 சதவீதம் குறைந்துள்ளது.
இளைஞர்கள் மத்தியில் இந்த சரிவு மிகப்பெரிய அளவில் பதிவானது.
EI பயனாளிகளின் எண்ணிக்கையில் Quebec கில் மிக அதிகமான வீழ்ச்சி பதிவானது.
Quebec கில், December 2022 இல் இருந்து 11 சதவீதம் சரிவு, January ரில் பதிவானது.
Prince Edward Island டில், EI உரிமை கோரல்கள் எட்டு சதவீதம் குறைந்துள்ளது.
Alberta, Ontarioவில் ஐந்து சதவிகிதம் சரிவு பதிவானது.
நாடு முழுவதும் COVID கட்டுப்பாடுகள் தளர்த்தல் ஆரம்பித்த 2021 இலைதுளிர் காலம் முதல் EI பயன்பாடு குறைவடைந்து வருகிறது.
EI பெறுபவர்களின் எண்ணிக்கை May 2021 இல் 1.7 மில்லியன் பயனாளிகளாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.