தேசியம்
செய்திகள்

தேர்தலில் வெளிநாட்டு அரசாங்கம் எனக்கு உதவவில்லை: நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong

கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான அறிக்கையில் பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.

தேர்தலில் சீனாவின் தலையீட்டால் ஆதாயம் அடைந்ததாகக் கூறப்படும் Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong தனக்கு எதிரான அறிக்கைகளை மறுக்கின்றார்.

தேர்தலில் வெளிநாட்டு அரசாங்கம் தனக்கு உதவவில்லை என அவர் மீண்டும் கூறினார்.

நான் அறிந்த வரை, எனது வேட்பு மனுத் தாக்கல், தேர்தல் பிரச்சாரம் ஆகியவற்றின் போது வெளிநாட்டில் இருந்து எந்த உதவியும் தனக்கு வழங்கப்படவில்லை எனவும் அந்த வகையில் எந்த எந்த உதவியையும் ஏற்கப் போவதில்லை எனவும் அவர் கூறினார்.

Don Valley வடக்கு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள Han Dong குறித்து கனடாவின் உளவு அமைப்பினால் அவரது அலுவலகம் எச்சரிக்கப்பட்டதாக வெளியான ஊடக அறிக்கையை பிரதமர் Justin Trudeau ஏற்கனவே மறுத்துள்ளார்.

Related posts

Ontario, Quebec, New Brunswick மாகாணங்களில் மின்சாரம் இல்லாமல் ஆயிரக் கணக்கானவர்கள்

Lankathas Pathmanathan

Toronto விமான நிலைய தங்க கொள்ளையில் தமிழர் உட்பட நால்வர் கைது!

Lankathas Pathmanathan

பொதுத் தேர்தல் பிரச்சாரம் August மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கலாம்: Bloc Québécois தலைவர்

Gaya Raja

Leave a Comment