தேசியம்
செய்திகள்

April 1 அதிகரிக்கும் குறைந்தபட்ச ஊதியம்

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அதிகரிக்கிறது.

April 1ஆம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு $16.65 உயர்கிறது.

2022ஆம் ஆண்டில் 6.8 சதவீதம் உயர்ந்த நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் இந்த ஊதிய உயர்வு இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.

மத்திய அரசாங்கம், 2021 ஆம் ஆண்டில் ஒரு மணி நேரத்திற்கு $15 என்ற குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்தது.

அதனை தொடர்ந்து பணவீக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசாங்கம் அதை அதிகரித்தும் வருகிறது

ஒவ்வொரு ஆண்டும் April 1ஆம் திகதி இந்த அதிகரிப்பு நடைமுறைக்கு வருகிறது

தற்போது குறைந்தபட்ச ஊதியம் $15.55 உள்ளது குறிப்பிடத்தக்கது

Related posts

RCMP அதிகாரிகளைக் கொலை செய்ய சதி: குற்றவாளிக்கு பிணை மறுப்பு

Lankathas Pathmanathan

Toronto காவல்துறைத்கு புதிய தலைவர் நியமனம்

Lankathas Pathmanathan

Donald Trump – Justin Trudeau தொலைபேசியில் உரையாடல்!

Lankathas Pathmanathan

Leave a Comment