தேசியம்
செய்திகள்

கனடாவின் நிதி நிறுவனங்கள் பாதுகாப்பாக உள்ளன – நிதி அமைச்சர் உறுதி

கனடாவின் நிதி நிறுவனங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நிதி அமைச்சர் Chrystia Freeland கனேடியர்களுக்கு உறுதியளிக்கிறார்.

அமெரிக்க வங்கியின் சரிவைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் கனடாவின் வங்கி கட்டுப்பாட்டாளர், கனடிய மத்திய வங்கியின் தலைவர் ஆகியோரை சந்தித்தார்.

Californiaவை தளமாகக் கொண்ட Silicon Valley வங்கியை அமெரிக்க கட்டுப்பாட்டாளர் வெள்ளிக்கிழமை (10) மூடியதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

திங்கட்கிழமை (13) நிதியமைச்சர் Chrystia Freeland, நிதி நிறுவனங்களின் கண்காணிப்பாளரை சந்தித்தார்.

தேசிய, பிராந்திய கனேடிய நிதி நிறுவனங்களின் தலைவர்களுடனும் Freeland சந்திப்புகளை மேற்கொண்டார்.

Related posts

வட்டி விகித அதிகரிப்பை நிறுத்த அரசு மத்திய வங்கியிடம் கோர வேண்டும்

Lankathas Pathmanathan

சீன தூதரை கனடாவில் இருந்து வெளியேற்றுவது குறித்து முடிவு செய்யப்படவில்லை: Justin Trudeau

சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்: Ottawa காவல்துறை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment