வட அமெரிக்காவின் முதல் Volkswagen EV மின்கலன் தொழிற்சாலைக்கு கனடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
Volkswagen நிறுவனம் தென்மேற்கு Ontarioவில் இந்த மின்சார வாகன தொழிற்சாலையை உருவாக்க உள்ளது.
உள்ளூர் மூலப்பொருட்களின் விநியோகம், மின்சாரத்திற்கான பரந்த அணுகல் உள்ளிட்ட சிறந்த நிலைமைகளை கனடா வழங்குகிறது என இந்த முடிவு குறித்த அறிவித்தலில் Volkswagen நிறுவனம் கூறியுள்ளது.
இந்த அறிவித்தலை தொழிலாளர்கள், சுற்றுச்சூழல், பொருளாதாரத்திற்கு சிறந்த செய்தி என பிரதமர் Justin Trudeau வரவேற்றார்.
இந்த அறிவித்தலை Ontario மாகாண பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் Vic Fedeli, மத்திய தொழில் அமைச்சர் அமைச்சர் Francois-Philippe Champagne ஆகியோரும் வரவேற்றுள்ளனர்.
இந்த மின்சார வாகன தொழிற்சாலை St. Thomas Ontarioவில் அமையவுள்ளது.
2027ஆம் ஆண்டில் அங்கு உற்பத்தி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Ontarioவில் அமையவுள்ள இரண்டாவது மின்சார வாகன தொழிற்சாலை இதுவாகும்.