கடந்த இரண்டு கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு நெறிமுறை சிறப்பாக செயல்பட்டதாக செவ்வாய்க்கிழமை வெளியான புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
பொது தேர்தலுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் கனேடியர்களுக்கு தெரிவிக்க வடிவமைக்கப்பட்ட நெறிமுறை குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
புதிதாக வெளியிடப்பட்ட சுயாதீன அறிக்கை இந்த நெறிமுறை ஒட்டுமொத்தமாக சிறப்பாகச் செயல்பட்டது என குறிப்பிடுகிறது.
2019 அல்லது 2021 பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு இருப்பதைக் கண்டறியவில்லை என அந்த அறிக்கை கூறுகிறது.
2021 தேர்தலில் குறுக்கீடு முயற்சிகள் தேர்தல் முடிவை சமரசம் செய்யவில்லை எனவும் அந்த அறிக்கை கூறுகிறது
இந்த அறிக்கையில் எதிர்காலத்திற்கான பல பரிந்துரைகளும் உள்ளடங்கியுள்ளன.