கனடா உக்ரைனை ஆதரிக்காத நிலை உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என பிரதமர் Justin Trudeau கூறினார்.
ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைனைப் பாதுகாப்பதில் கனடாவும் அதன் நட்பு நாடுகளும் ஆதரவளிக்காததன் விளைவுகள் முழு உலகிற்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என் பிரதமர் தெரிவித்தார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஒரு வருட நிறைவு குறிக்கும் வகையில் கனடா முழுவதும் வெள்ளிக்கிழமை (24) விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் பிரதமரின் இந்த கருத்து வெளியானது.
உக்ரைன் மக்கள் நமது ஜனநாயகங்கள் அனைத்தையும் ஆதரிக்கும் விதிகளை நிலைநிறுத்த போராடுகிறார்கள் எனவும் Justin Trudeau செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த ஒரு வருடத்தில் உக்ரைனுக்கு 5 பில்லியன் டொலர்களுக்கு மேல் பலதரப்பட்ட ஆதரவை வழங்கியுள்ளதாக மத்திய அரசு கூறியது.
இதேவேளையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் பின்னர் ரஷ்யாவுடனான கனடாவின் வர்த்தகம் சரிவடைந்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.