பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் முதலாவது முழு நாளான திங்கட்கிழமை, கட்சித் தலைவர்களின் உறுதிமொழி அறிவிப்புகளுடன் நிறைவுக்கு வந்தது.
கனடிய பொது தேர்தல் வாக்களிப்பு September 20ஆம் திகதி நடைபெறவுள்ளது என ஞாயிற்றுக்கிழமை உத்தியோகமாக அறிவிக்கப்பட்டது.
ஆளுநர் நாயகம் Mary Simonனை Rideau Hallலில் சந்தித்த பிரதமரும் Liberal கட்சியின் தலைவருமான Justin Trudeau 43ஆவது நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு அழைப்பு விட கோரினார். இந்தக் கோரிக்கையை ஆளுநர் நாயகம் Simon ஏற்றுக் கொண்ட நிலையில் 43வது கனடிய நாடாளுமன்றம் கலைந்து, தேர்தல் பரப்புரை உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
COVID தொற்றில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான திட்டங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் முதல் முழு நாளான திங்கட்கிழமை கட்சிகளினால் வெளியிடப்பட்டன. இந்த திட்டங்களின் செலவுகளை ஈடு செய்வதற்கான திட்டங்களை கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டனர்.