Ontario, Quebec மாகாணங்கள் கடுமையான பனிப்பொழிவை எதிர்கொள்கின்றன.
தெற்கு Ontarioவும் Quebec மாகாணமும் புதன்கிழமை (22) காலை முதல் கடும் பனி, உறைபனி பொழிவை எதிர்கொள்கின்றன.
தெற்கு Ontarioவில், 20 சென்டிமீட்டர் வரை பனி, 20 மில்லி மீட்டர் பனிக்கட்டிகள் எதிர்வு கூறப்படுகிறது.
Ontarioவின் தெற்கு பகுதி முழுவதும் உறைபனி மழை, குளிர்கால புயல் அல்லது பனிப்பொழிவு எச்சரிக்கைகள் அமுலில் உள்ளது.
அதேவேளை மேற்கு கனடாவின் பெரும் பகுதிகள் கடும் குளிரை எதிர்கொள்கின்றன.
Prairies மாகாணங்கள், British Colombiaவின் சில பகுதிகளில், -40 செல்சியல் வரை குளிர் நிலையை எதிர்கொள்கின்றன.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளை அடக்கிய வானிலை எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது.
இந்த குளிர்காலப் புயல் காரணமாக நாடளாவிய ரீதியில் பல விமான பயணங்கள் இரத்து செய்யப்படுவதுடன், மேலும் பல தாமதமாகின்றன.
Air Canada அதன் விமானங்களில் கால் பங்கின் சேவையை நிறுத்துகிறது.
WestJet தனது பயணங்களில் மூன்றில் ஒரு பகுதியை நிறுத்தி வைத்துள்ளது.