தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பது குறித்த பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (21) மாலை நடைபெறவுள்ளது.
செவ்வாய் மாலை இந்த பொதுக்கூட்டம் மாலை 6 மணிக்கு Scarborough Civic Centreரில் நடைபெறுகிறது.
தமிழ் சமூக மையத் திட்ட நிலவரத்தை அறிவதோடு, திட்டத்தை எவ்வாறு முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்ற பொது மக்களின் கருத்துக்களை சமூக மைய இயக்குநர் குழுவிடம் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த பொதுக்கூட்டம் அமையும்.
இதேவேளையில் பொது மக்களின் கேள்விகளுக்கு இயக்குநர் குழு பதிலளிக்க இந்த பொதுக்கூட்டம் வாய்ப்பளிக்கும்
தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பதைத் தீர்மானிக்கும் ஆலோசனை பொறிமுறை ஒன்றை சமூக மைய இயக்குநர் குழு ஏற்கனவே ஆரம்பிதது.
இதற்காக இந்த மாதம் ஒரு புதிய இணைய மூலம் கலந்தாய்வு முன்னெடுக்கப்பட்டு திங்கட்கிழமை (21) வரை தொடர்ந்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.