தேசியம்
செய்திகள்

அவசர காலச் சட்டத்தை செயல்படுத்தியதற்கான மத்திய அரசின் முடிவு சரியானது!

அவசர காலச் சட்டத்தை செயல்படுத்தியதற்கான மத்திய அரசின் முடிவு சரியானது என பொது ஒழுங்கு அவசர ஆணையம் வெள்ளிக்கிழமை (17) தீர்ப்பளித்துள்ளது.

Ottawaவின் “Freedom Convoy” எனப்படும் எதிர்ப்பு முற்றுகை போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர Justin Trudeau அரசாங்கம் அவசர காலச் சட்டத்தை செயல்படுத்தியது.

அவசர காலச் சட்டத்தை செயல்படுத்தியதற்கான மத்திய அரசின் முடிவு குறித்து கடந்த குளிர் காலத்தில் நடந்த ஒரு மாத தேசிய விசாரணையின் முடிவு அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியானது.

இந்த அவசர காலச் சட்டத்தின் விசாரணை முடிவை ஆணையர் Paul Rouleau இரண்டாயிரம் பக்கம் கொண்ட தனது விசாரணை அறிக்கையில் வெளியிட்டார்.

தொடர்ச்சியான காவல்துறை தோல்விகளும் அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் இழைக்கப்பட்ட தவறுகளும் அவசரகாலச் சட்டம் செயல்படுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியதாக அவர் தனது அறிக்கையில் கூறினார்.

சில தவறுகள் சிறியதாக இருந்தாலும் மேலும் சில தவறுகளுடன் இணைகையில் அவை கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலைக்கு காரணமாகின என ஆணையர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

சட்டப்பூர்வமான எதிர்ப்பு, சட்டவிரோதமாக மாறியபோது, தேசிய அவசர நிலையில் உச்சக்கட்டத்தை அடைந்தது என Rouleau இந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.

Related posts

98 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கும் கனடா

Playoff தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட Blue Jays அணி

Lankathas Pathmanathan

தடுப்பூசி போடப்படாத மாணவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவர்களை விட Ontarioவில் வேறு விதிகளை எதிர்கொள்வார்கள்

Gaya Raja

Leave a Comment