Quebec மாகாணத்தில் இல்லமொன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர்.
வியாழக்கிழமை (09) அதிகாலை 1 மணியளவில் Lanaudiere பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த தீ காரணமாக இல்லமொன்று முற்றிலும் அழிக்கப்பட்டது என Quebec காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த வீட்டினுள் 6 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
பலியானவர்களில் 4 குழந்தைகளும் அடங்குகின்றனர்.
அவர்களின் அடையாளம், வயது போன்றியவை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த தீ விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் வகையில் குற்றவியல் புலனாய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.