பிணை சீர்திருத்தத்தை மத்திய அரசு தீவிரமாக பரிசீலிப்பதாக நீதி அமைச்சர் David Lametti தெரிவித்தார்.
கனடாவின் பிணை சட்டங்களை மாற்றியமைக்குமாறு மாகாண, பிராந்திய முதல்வர்கள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் சீர்திருத்தம் செய்வது குறித்து தீவிரமாக பரிசீலிப்பதாக நீதி அமைச்சர் கூறினார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பிணை முறை மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாகாண முதல்வர்கள் ஒருமனதாக Liberal லிபரல் அரசாங்கத்திடம் வலியுறுத்தினர்.
பிணையில் வெளிவரும் குற்றவாளிகள் மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, மாற்றங்களுக்கான கோரிக்கைகள் அதிகரித்து வருவதாக முதல்வர்களின் கடிதம் கூறுகிறது.
மாகாண நீதி அமைச்சர்களுடனான வரவிருக்கும் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து பற்றி விவாதிக்கப்படும் என வியாழக்கிழமை (09) கனேடிய சட்டத்தரணிகள் சங்கத்தில் ஆற்றிய உரையின் போது, அமைச்சர் Lametti கூறினார்.