December 12, 2024
தேசியம்
செய்திகள்

மத்திய அரசின் புதிய நிதி உதவி குறித்து முதல்வர்களிடையே மாறுபட்ட கருத்து

மாகாணங்களுக்கும், பிராந்தியங்களுக்கும் மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள $46.2 பில்லியன் புதிய நிதி உதவி ஒரு ஆரம்ப புள்ளி என Ontario முதல்வர் தெரிவித்தார்.

பிரதமர் Justin Trudeauவுடன் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற முதல்வர்களின் சந்திப்பின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் Doug Ford இந்த கருத்தை கூறினார்.

புதிதாக அறிவிக்கப்பட்ட $46.2 பில்லியனில் Ontario $8.4 பில்லியனை பெறும்.

கனடா Health Transfer அவசர உதவியின் ஒரு பகுதியாக Ontario மேலும் $776 மில்லியன் பெறும்
எனவும் முதல்வர் Fordடின் அலுவலகம் கூறியது.

ஆனாலும் Trudeau உறுதியளித்த கூடுதல் நிதியானது மத்திய அரசாங்கத்தின் சுகாதாரப் பாதுகாப்புச் செலவினத்தில் 24 சதவீதத்தை மட்டுமே அதிகரிக்கும் என Quebec முதல்வர் François Legault கூறினார்.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 24ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

சட்ட மன்றத்திலிருந்து NDP உறுப்பினர்கள் வெளியேற்றம்

Lankathas Pathmanathan

உக்ரைனில் ரஷ்யா போர்க் குற்றம் இழைக்கிறது: கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த்

Leave a Comment