தேசியம்
செய்திகள்

தவறான COVID தகவல்கள் 2,800 கனடியர்களின் இறப்புகளுக்கு காரணமாகியது?

தவறான COVID தகவல்கள் 2,800 கனடியர்களின் இறப்புகளுக்கு காரணமாகியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

தொற்று குறித்த தவறான தகவல்கள் குறைந்தது 300 மில்லியன் டொலர் மருத்துவமனை, ICU செலவுகளுக்கு பங்களித்ததாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

The Council of Canadian Academies இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தவறான தகவல்களால் மக்கள் COVID தொற்று உண்மையானதல்ல என நம்பி, தடுப்பூசியை பெற மறுத்ததாக இந்த அறிக்கை கூறுகிறது.

COVID மிகைப்படுத்தப்பட்டதாக நம்பி, 2021ஆம் ஆண்டின் March மாதம் முதல் November மாதங்களுக்கு இடையில் 2.35 மில்லியன் மக்கள் தடுப்பூசியைப் பெறுவதை தாமதப்படுத்தியதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Related posts

கனடாவின் மக்கள் தொகை 40.5 மில்லியனை தாண்டியது

Lankathas Pathmanathan

விரைவில் தேர்தலா? – வேட்பாளர்களுக்கான அழைப்பு விடுத்த பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Ontario Liberal கட்சியின் இடைக்காலத் தலைவராக John Fraser தெரிவு

Lankathas Pathmanathan

Leave a Comment