தேசியம்
செய்திகள்

ArriveCAN செயலி தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்ட பிரதமர்

ArriveCAN செயலியின் பயன்பாட்டு மேம்பாட்டை ஒப்பந்தம் செய்வதற்கான முடிவு தர்க்கமற்றது என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

ArriveCAN செயலி தொடர்பான கொள்முதல் நடைமுறைகளை விசாரிக்குமாறு Privy Council எழுத்தரிடம் கோரியுள்ளதாக பிரதமர் திங்கட்கிழமை (23) கூறினார்.

மில்லியன் டொலர்கள் பெறுமதியான ArriveCAN செயலியின் ஒப்பந்தங்களை இரு நபர் கொண்ட நிறுவனத்திற்கு வழங்கியது தர்க்கமற்ற ஒரு முடிவு என அவர் தெரிவித்தார்.

9 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்ட இந்த செயலியின் மேம்பாடு தொடர்பான ஒப்பந்தங்களில் 8.3 மில்லியன் டொலர்களை GCstrategies என்ற நிறுவனம் ஆறு வெளி நிறுவனங்களுக்கு துணை ஒப்பந்தமாக வழங்கியதாக அண்மையில் தெரியவந்தது.

அந்த நிறுவனங்களை பொதுச் சேவை அமைச்சு ஏன் நேரடியாக சேவைக்கு அமர்த்தவில்லை அல்லது அமைச்சினால் ஏன் இந்த பணியை செய்ய முடியவில்லை போன்ற கேள்வியை இந்த செயல்முறை எழுப்பியுள்ளது.

COVID தொற்று காலத்தில் எல்லையைத் தாண்டி நாட்டிற்குள் நுழைபவர்களின் பயன்பாட்டிற்கு ArriveCan செயலி கனடிய அரசாங்கத்தினால் கட்டாயப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டு நாடுகளுக்கான சாத்தியத்தை இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் அதிகரித்துள்ளது?

Lankathas Pathmanathan

கனடிய அரசின் பொருளாதார, நிதி புதுப்பித்தல் அறிக்கை இந்த மாதம் 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்: நிதி அமைச்சர் Chrystia Freeland

Lankathas Pathmanathan

Ontarioவில் இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment