தேசியம்
செய்திகள்

COVID தளர்வுகளுக்கு உகந்த தருணம் இதுவல்ல: பொது சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

COVID நடவடிக்கைகளை தளர்த்துவதற்கு உகந்த தருணம் இதுவல்ல என பொது சுகாதார அதிகாரிகள் எச்சரித்தனர்.

COVID தொற்றில் இருந்து நாட்டின் சுகாதாரப் பாதுகாப்புத் துறை மீண்டு வரவில்லை என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

XBB.1.5 மாறுபாடுகள் கனடாவில் தொடர்ந்து பரவி வருவதாகவும் அவர் கூறினார்.

ஆனால் இந்த தொற்றுகள் இன்னும் கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும் என்ற அறிகுறி இதுவரை தெரியவில்லை என Tam தெரிவித்தார்.

COVID தொற்றின் மிகக் கடுமையான விளைவுகளுக்கு எதிராக bivalent booster தடுப்பூசிகளே சிறந்த தற்காப்புகளில் ஒன்று எனவும் Tam கூறினார்.

கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் கழிவு நீர் சோதனை குறித்தும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos விளக்கமளித்தார்.

அதேவேளை இந்த ஆண்டின் முதலாவது தொற்று பதில் வழிகாட்டுதல்கள் வெள்ளியன்று வெளியிடப்பட்டது.

XBB.1.5 அல்லது Kraken எனப்படும் துணை மாறுபாட்டின் பரவலை இந்த தொற்று பதில் வழிகாட்டுதல்கள்
குறிப்பிடுகிறது.

Related posts

புதிய வீடு கட்டுமான முயற்சிகளுக்கு $600 மில்லியன் நிதி?

Lankathas Pathmanathan

தமிழ் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மற்றொரு தமிழ் இளைஞர் குற்றவாளியென தீர்ப்பு!

Lankathas Pathmanathan

Manitoba: கடுமையான கட்டுப்பாடுகள் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது

Gaya Raja

Leave a Comment