தேசியம்
செய்திகள்

Liberal கட்சியை விட முன்னிலையில் உள்ள Conservative கட்சி

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் Conservative கட்சி Liberal கட்சியை விட 7 புள்ளிகள் மக்கள் ஆதரவில் முன்னிலையில் உள்ளதாக இன்று வெளியான புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கின்றது.

ஒரு தேர்தல் நடைபெற்றால் 35.6 சதவீதமான மக்கள் ஆதரவை Pierre Poilievre தலைமையிலான Conservative கட்சி பெறும் என இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.

Liberal கட்சியின் ஆதரவு 28.3 சதவீதமாகவும், NDP கட்சியின் ஆதரவு 20.7 சதவீதமாகவும் இருக்கும் எனவும்
கருத்துக் கணிப்பு விபரங்கள் தெரிவிக்கின்றன.

தவிரவும் Bloc Québécois 7.4 சதவீதம், பசுமை கட்சி 5.8 சதவீதம், மக்கள் கட்சி 2.1 சதவீதம் என ஆதரவை பெறும் என இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.

ஆனாலும் பிரதமருக்கான தெரிவில் Justin Trudeau தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

அவருக்கான ஆதரவு 30 சதவீதமாகவும், Pierre Poilievreருக்கான ஆதரவு 27.5 சதவீதமாகவும் உள்ளது.

16.2 சதவீதமான ஆதரவுடன் Jagmeet Singh மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Related posts

விரைவில் கனடா முழுவதும் LGBTQ+ பேரணிகள்

Lankathas Pathmanathan

Ontario வாகன ஓட்டுநர்கள் உரிமத் தகடுகளை புதுப்பிக்கத் தேவையில்லை!

Lankathas Pathmanathan

Torontoவில் அதிகரிக்கும் வன்முறை குறித்து Olivia Chow கவலை

Lankathas Pathmanathan

Leave a Comment