September 29, 2026
தேசியம்
செய்திகள்

தெற்கு Ontarioவிற்கு சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை

Toronto பெரும்பாகத்திற்கு உறைபனி மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

London முதல் Kingston வரை தெற்கு Ontarioவின் பெரும்பாலான பகுதிகளுக்கு உறைபனி மழை எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா விடுத்துள்ளது.

உறைபனி மழை, பனித் துகள்கள், பனி ஆகியவை வியாழக்கிழமை (19) தெற்கு Ontario  முழுவதும் எதிர்வு கூறப்படுகிறது.

வியாழன் காலை, உறைபனி மழை, பனிக்கட்டிகள், பனி ஆகியன எதிர்பார்க்கப்படுகிறது.

பிற்பகலில் வானிலை மழை தூறலாக மாறும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

வியாழக்கிழமை வெப்பநிலை உறை நிலைக்கு அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Toronto வடக்கு பகுதிகளுக்கு குளிர்கால வானிலை எச்சரிக்கை அமுலில் உள்ளது.

Toronto வடக்கின் சில பகுதிகளில் வியாழக்கிழமை 5 முதல் 10 cm வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சேதப்படுத்தபடும் தமிழ் வேட்பாளரின் பிரச்சார பதாதைகள்?

Lankathas Pathmanathan

Ontario போக்குவரத்துத்துறை இணையமைச்சராகும் தமிழர்

Lankathas Pathmanathan

இரண்டு சிறிய விமானங்கள் மோதிக் கொண்டன?

Lankathas Pathmanathan

Leave a Comment