தேசியம்
செய்திகள்

Markham நகரில் விபத்துக்குள்ளான விமானம்!

Ontario மாகாணத்தின் Markham நகரில் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் திங்கட்கிழமை (16) நிகழ்ந்தது.

விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு பதிலாக ஒரு சிறிய விமானம், அருகில் உள்ள நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது

Toronto Buttonville விமான நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்ததை York பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்

இந்த விமானம் விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்க முயன்ற போது அது தவறி அருகில் உள்ள நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் எவரும் காயமடையவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

விசாரணைகள் தொடரும் நிலையில் இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

Related posts

கனடாவில் COVID தடுப்பூசியை தயாரிக்க ஒப்பந்தம்

Lankathas Pathmanathan

Toronto விமான நிலைய தங்க கொள்ளையில் மற்றொரு சந்தேக நபர் கைது

Lankathas Pathmanathan

Ontarioவில் தொற்றுக்கள் மீண்டும் மூவாயிரத்தை தாண்டியது!

Gaya Raja

Leave a Comment