தேசியம்
செய்திகள்

கடத்தப்பட்ட Ontario பெண் குறித்த தகவல் வழங்குபவர்களுக்கு $100,000 வெகுமதி

கடத்தப்பட்டதாக கூறப்படும் Ontario பெண் குறித்த தகவல் வழங்குபவர்களுக்கு 100,000 டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் Elnaz Hajtamiri என்ற பெண் Wasaga Beach இல்லத்தில் இருந்து கடத்தப்பட்டதாக Ontario மாகாண காவல்துறை தெரிவிக்கிறது.

இவரது இருப்பிடம் குறித்த தகவல் வழங்குபவர்களுக்கு 100,000 டொலர் பரிசு வழங்குவதாக வியாழக்கிழமை (12) OPP அறிவித்தது.

காவல்துறையினரின் உடை அணிந்த மூன்று நபர்களினால் அவர்வெள்ளை நிற Lexus SUV வாகனத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சந்தேக நபர்களில் இருவரின் ஓவியங்களை முதன்முறையாக காவல்துறையினர் வெளியிட்டனர்.

இந்த வெகுமதி OPP, York பிராந்திய காவல்துறையால் வழங்கப்படுகிறது.

Related posts

Floridaவில் தொடர் மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு கனேடியர்கள் பலி!

Gaya Raja

Albertaவில் மீண்டும் அறிமுகமாகும் கட்டுப்பாடுகள்!

Gaya Raja

மத்திய அரசின் பொது சேவை ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படும் தடுப்பூசிகள்!

Gaya Raja

Leave a Comment