February 23, 2025
தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு விமான ஏவுகணை உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய கனடா

உக்ரைனுக்கு விமான ஏவுகணை உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய கனடாவுக்கு உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy நன்றி தெரிவித்தார்.

உக்ரைனுக்காக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட விமான ஏவுகணை உபகரணங்களை கனடா வழங்கும் என்ற அறிவிப்பை செய்வாய்க்கிழமை (10) கனடிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டது.

இந்த நன்கொடைக்கு உக்ரைன் ஜனாதிபதி, கனடிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

Justin Trudeauவின் ஜனநாயகம், மனித உரிமைகளுக்கு ஆதரவான உண்மையான தலைமை மீண்டும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி கூறினார்.

கனடாவின் நன்கொடை அழிவுகரமான வான்வழித் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த உதவும் எனநம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கனடிய திரைப்பட இயக்குனருக்கு Oscar

Lankathas Pathmanathan

கனேடிய படையினர் உக்ரைனிலில் தரையிறக்கம்

Lankathas Pathmanathan

முதற்குடியினருடன் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட கனேடிய அரசாங்கம்

Gaya Raja

Leave a Comment