தேசியம்
செய்திகள்

Oakville பேரூந்து விபத்தில் 6 பேர் காயம்

Ontario மாகாணத்தின் Oakville நகரில் நிகழ்ந்த பாடசாலை பேரூந்து விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.

நெடுஞ்சாலை 403 மேற்கு நோக்கிச் செல்லும் வளைவில் திங்கட்கிழமை (09) காலை இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் 8 வாகனங்கள் மோதியதில் 6 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நிகழ்ந்த போது பேரூந்தில் குழந்தைகள் யாரும் இருக்கவில்லை என OPP தெரிவித்தது.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

Related posts

Saskatchewan மாகாணம் 2026-27ஆம் ஆண்டுக்குள் சமநிலைக்குத் திருப்பும்: நிதி அமைச்சர்

Lankathas Pathmanathan

முஸ்லீம் குடும்பத்தினர் மீது பயங்கரவாத தாக்குதல்? – நால்வர் பலி!

Gaya Raja

British Colombia மாகாணம் முழுவதும் அவசர நிலை!

Lankathas Pathmanathan

Leave a Comment