கனடியர்களுக்கான பயண எச்சரிக்கை பட்டியலில் மெக்சிகோ, Jamaica, Peru ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.
கனேடியர்களுக்கு பயண ஆலோசனைகளின் பட்டியலை கனேடிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள கனேடியர்களின் பாதுகாப்பு கனடா அரசாங்கத்திற்கு முதன்மையான முன்னுரிமையாகும் என கனடாவின் உலக விவகாரங்களுக்கான செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மெக்சிகோவின் வடக்கு, மேற்கு, மத்திய பகுதியில் உள்ள பல மாநிலங்களுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனேடிய அரசாங்கம் கனடியர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் அதிக அளவு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் அதிக அளவு வன்முறை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் காரணமாக இந்த எச்சரிக்கையை கனடிய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ளது.
மெக்சிகோ, Jamaica, Peru தவிர Brazil, El Salvador, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணிக்கும் கனடியர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.