Vaughan நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் Justin Trudeau இரங்கல் தெரிவித்துள்ளார்
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் முழுமையான விசாரணைகள் நடத்துவார்கள் என எதிர்பார்ப்பதாக Trudeau கூறினார்.
இந்த விசாரணைக்கு மத்திய அரசாங்கத்தின் தரப்பிலிருந்து தேவையான எந்த ஆதரவையும் வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (18) அடுக்கு மாடிக் குடியிருப்பில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் துப்பாக்கி தாரியால் சூட்டுக் கொல்லபட்டனர்.
மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர்களில் மூவர் அடுக்கு மாடிக் கட்டிட வாரியத்தின் உறுப்பினர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்
துப்பாகிதாரியான 73 வயதான Francesco Villi காவல்துறையினரால் சம்பவ இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் பலியான, காயமடைந்தவர்களின் விபரங்களை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (20) வெளியிட்டனர்.
பலியானவர்கள் 57 வயதான Rita Camilleri, 79 வயதான Vittorio Panza, 75 வயதான Russell Manock, 71 வயதான Helen “Lorraine” Manock, 59 வயதான Naveed Dada ஆகியோர் பலியாகியுள்ளனர்.
66 வயதான Doreen Di Nino காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மிகவும் சிக்கலான விசாரணையின் ஒரு பகுதியாகவே உள்ளது என York பிராந்திய காவல்துறைத் தலைவர் Jim MacSween கூறியுள்ளார்.
சிறப்புப் புலனாய்வு பிரிவு சந்தேக நபர் மீதான காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.