February 23, 2025
தேசியம்
செய்திகள்

British Colombia மாகாணத்தில் குழந்தை பராமரிப்பு கட்டணத்தில் பெரும் சேமிப்பு

British Colombia மாகாணத்தில் குழந்தை பராமரிப்பு கட்டணத்தில் குடும்பங்கள் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான டொலர்களை சேமிக்க முடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய பிரதமர் Justin Trudeau, British Colombia மாகாண முதல்வர் David Eby இணைந்து இந்த அறிவித்தலை வெள்ளிக்கிழமை (02) வெளியிட்டனர்.

British Colombia கடந்த ஆண்டு November மாதம் கனடாவின் கூட்டாட்சி குழந்தை பராமரிப்பு திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கனடாவின் முதல் மாகாணமாக கையெழுத்திட்டது.

சுமார் 69 ஆயிரம் குடும்பங்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என British Colombia மாகாணம் தெரிவித்தது.

வியாழக்கிழமை (01) முதல் British Columbia முழுவதும் சராசரியாக குழந்தை பராமரிப்பு கட்டணத்தை பாதியாக குறைத்துள்ளோம் என கூறிய பிரதமர் Trudeau இதன் மூலம் குடும்பங்கள் ஒரு குழந்தைக்கு ஒரு மாதத்திற்கு 550 டொலர்கள் வரை கூடுதலாக சேமிக்கின்றன என கூறினார்.

உலகளாவிய பணவீக்கம் பல அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் நேரத்தில், குழந்தை பராமரிப்பு கட்டணம் British Colombiaயில் குறைகிறது என முதல்வர் Eby கூறினார்

Related posts

உள்நாட்டு தபால் சேவைகள் வழமைக்குத் திரும்பின?

Lankathas Pathmanathan

நீண்ட வார இறுதியில் British Columbiaவில் 2,400க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள்!

Gaya Raja

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 7ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment