உக்ரைனுடனான போரில் ரஷ்யாவிற்கு உதவிய பெலாரஸ் இராணுவ, பாதுகாப்பு சேவைகளை குறிவைத்து, கனடா பொருளாதாரத் தடைகளை அதிகரித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு அதன் ஆதரவின் பிரதிபலிப்பாக பெலாரஸ் மீதான புதிய தடைகளை வெளியுறவு அமைச்சர் Mélanie Joly செவ்வாய்க்கிழமை (22) அறிவித்துள்ளார்.
பொருளாதாரத் தடைகள் பட்டியலில் கனடா, 22 பெலாரஷ்ய அதிகாரிகளை இணைக்கிறது.
இவர்களில் ரஷ்ய இராணுவத்தினர், அவர்களின் உபகரணங்களின் போக்குவரத்தில் உதவுபவர்கள் அடங்குகின்றனர்.
இந்த பொருளாதாரத் தடைகள் இராணுவ உற்பத்தி, தொழில்நுட்பம், பொறியியல், வங்கி, புகையிரத துறைகளில் உள்ள 16 பெலாரஷ்ய நிறுவனங்களையும் பாதிக்கின்றன.
பெலாரஷ்ய தலைமை மனித உரிமை மீறல்களை செயல்படுத்துவதாகவும், ரஷ்யாவின் தாக்குதல்களுக்கான தளமாக அந்நாட்டை அனுமதிப்பதாகவும் Joly ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாடு கடத்தப்பட்ட பெலாரஸ் எதிர்க்கட்சித் தலைவர் Sviatlana Tsikhanouskaya கனடா வந்தடைந்த நிலையில் இந்தத் தடைகள் அறிவிக்கப்பட்டன.
Tsikhanouskaya, கனடாவில் பிரதமர் Justin Trudeau, வெளிவிவகார அமைச்சர் Joly உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.