கனேடியர்களுக்கு எதிராக ஈரான் மரண அச்சுறுத்தல்களை விடுத்துள்ளதாக CSIS அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் தனது அரசாங்கம் நிலைமைகளை கண்காணித்து வருவதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.
இந்த எச்சுறுத்தல்கள் குறித்து அறிந்துள்ளதாக கூறும் கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை இதற்கு பதிலளிப்பதற்காக நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் கூறியுள்ளது.
கனேடியர்களின் வாழ்வில் ஈரானியர்கள் தலையிடுவதாகவும், அவர்களுக்கு அச்சுறுத்தல்களை விடுவதாகவும் வெளியாகும் அறிக்கைகளை தனது அரசாங்கம் கண்காணித்து வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் தலைவர்களை தடைசெய்யும் வகையில் அண்மைய வாரங்களில் கனடிய மத்திய அரசாங்கள் தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளை அறிவித்ததாக Trudeau சுட்டிக்காட்டினார்.