ரஷ்யாவுடன் நீண்ட கால அமைதிக்கு உதவுமாறு உக்ரேனிய ஜனாதிபதி கனடாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷ்யாவுடன் நீண்டகால சமாதானத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு கனடா உதவுமாறு உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைனில் ஏறக்குறைய 10 மாத கால யுத்தம் குளிர்காலத்தை நெருங்கும் நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Halifax சர்வதேச பாதுகாப்பு மன்றத்தில் முன் பதிவு செய்யப்பட்ட வீடியோ உரையில் உக்ரேனிய தலைவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
இந்த சர்வதேச பாதுகாப்பு மன்றத்தில் பங்கேற்றவர்களில் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்தும் அடங்குகின்றார்.
உக்ரைனின் இராணுவம் ரஷ்யாவுடனான போரில் வெற்றி பெறுகிறது என அங்கு உரையாற்றிய அமைச்சர் ஆனந்த் கூறினார்.