தேசியம்
செய்திகள்

அவசரகாலச் சட்ட பயன்பாடு தலைமுறைக்கு ஒரு முறை நிகழ வேண்டியது: துணைப் பிரதமர் Freeland

கனடாவின் அவசரகாலச் சட்ட பயன்பாடு தலைமுறைக்கு ஒரு முறை நிகழ வேண்டிய நடவடிக்கையாக இருக்க வேண்டும் என துணைப் பிரதமர் Chrystia Freeland தெரிவித்தார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கனடா எதிர்கொண்டது, உண்மையில், எமது தேசிய பாதுகாப்பு, எமது பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றுக்கு மிகவும் கடுமையான சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்தது என Freeland கூறினார்.

முற்றுகைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் கனடாவின் தேசிய பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற அளவில் இந்த அச்சுறுத்தல் இருந்தது என அவர் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் எடுத்த பொது ஒழுங்கு அவசர ஆணையத்தின் விசாரணைகள் தொடரும் நிலையில் துணை பிரதமரின் இந்த கருத்து வெளியானது.

கடந்த 13ஆம் திகதி ஆரம்பமான பொது ஒழுங்கு அவசர ஆணையத்தின் விசாரணைகள் எதிர்வரும் 25ஆம் திகதி வரை தொடரவுள்ளன.

Related posts

Brampton நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: Patrick Brown

Lankathas Pathmanathan

கடந்த மாதம் குறைவடைந்த வீடு விற்பனை

Lankathas Pathmanathan

கனடாவில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலி

Gaya Raja

Leave a Comment