கனடாவில் அனைத்தும் செயலிழந்து விட்டது என பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சியின் தலைவர் Pierre Poilievre தெரிவித்தார்
அதிகரித்த பணவீக்கம், உணவு, வீடு, எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றை புதன்கிழமை (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கண்டித்தார்.
இவை அனைத்திற்கும் பிரதமர் Justin Trudeauவும் Liberal அரசாங்கமும் காரணம் என குற்றம் சாட்டிய Poilievre, அதற்கான தீர்வாக Conservative கட்சியை முன்வைத்தார்.
போதைப்பொருள் பாவனை, குற்றம், வீடற்ற தன்மை ஆகியவற்றின் அதிகரிப்பு மத்திய அரசாங்கத்தின் குறைபாடுகள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனது திட்டம் அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்தி பணவீக்கப் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டுவருவது என கூறிய Poilievre, இதன் மூலம் பண வீக்கத்தை குறைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.