February 22, 2025
தேசியம்
செய்திகள்

சிரியா தடுப்பு முகாமில் இருந்து மூன்று கனடியர்கள் விடுதலை

சிரியாவில் ISIS தடுப்பு முகாமில் இருந்து இரண்டு கனேடிய பெண்களும், ஒரு குழந்தையும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் Kimberly Polman என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் 2019 ஆம் ஆண்டு சிரியாவில் குர்திஷ் போராளிகளால் கைது செய்யப்பட்டு, ISIS உடனான தொடர்பு குறித்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

விடுதலை செய்யப்பட்ட மற்றைய பெண், அவரது மகள் என கூறப்படும் குழந்தையின் அடையாளம் வெளியாகவில்லை.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தரவுகளின் படி, 50 கனடியர்கள் வட கிழக்கு சிரியாவில் இது போன்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகள் என கூறப்படுகிறது.

Related posts

Jasper தேசிய பூங்காவில் காட்டுத் தீயில் தீயணைப்பு வீரர் மரணம்

Lankathas Pathmanathan

COVID விரைவு சோதனைகளை கொள்வனவு செய்வதற்கு 2.5 பில்லியன் மதிப்புள்ள மசோதா

Lankathas Pathmanathan

Pickering சூதாட்ட மைய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment