February 22, 2025
தேசியம்
செய்திகள்

மீண்டும் வட்டி விகித அதிகரிப்பை அறிவிக்கவுள்ள மத்திய வங்கி!

வேலை இழப்புகளுக்கு எதிரான நகர்வுகளை கனடிய மத்திய வங்கி எடுக்க வேண்டும் என NDP தலைவர் Jagmeet Singh வலியுறுத்தினார்.

புதன்கிழமை (26) மீண்டும் ஒரு வட்டி விகித அதிகரிப்பு முடிவை மத்திய வங்கி எடுக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த கருத்தை Singh வெளியிட்டார்.

மத்திய வங்கி சுதந்திரமாக செயல்பட வேண்டும் எனவும் Singh வலியுறுத்தினார்.

அதிக பணவீக்கத்தை சமாளிக்கும் நோக்கில் மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வுகள் தொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டன என Singh கூறினார்.

மத்திய வங்கியின் வட்டி விகிதம் இந்த ஆண்டு மூன்று சதவீத புள்ளிகள் உயர்ந்துள்ளது.

புதனன்று மீண்டும் ஒரு உயர்வை நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

எதிர்வரும் பொருளாதாரக் கொந்தளிப்பை தணிக்க, மத்திய வங்கி சுதந்திரமாக செயல்படுவது அவசியம் என Liberal அரசாங்கமும் வலியுறுத்துகிறது.

வட்டி விகித அதிகரிப்பு, ஏற்கனவே சாவால்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு மேலும் சவாலாக அமையும் என நிதி அமைச்சரும் துணைப் பிரதமருமான Chrystia Freeland கூறினார்.

Related posts

காவல்துறை அதிகாரிக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்த துப்பாக்கிதாரி

Lankathas Pathmanathan

தடுப்பூசி சான்று தேவைப்படும் இரண்டாவது மாகாணமாகும் British Colombia

Gaya Raja

ஒரு நாளுக்கான அதிக தொற்றுக்களை பதிவு செய்த Quebec

Lankathas Pathmanathan

Leave a Comment