December 12, 2024
தேசியம்
செய்திகள்

B.C. NDP தலைமைப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தமிழர்

British Colombia மாகாணத்தின் NDP தலைமைப் போட்டியில் இருந்து தமிழரான அஞ்சலி அப்பாத்துரை விலத்தப்பட்டுள்ளார்.

British Colombia மாகாணத்தின் NDP நிர்வாகிகள் அஞ்சலி அப்பாதுரையை தலைமைப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வாக்களித்துள்ளார்.

புதன்கிழமை (19) இரவு நடைபெற்ற பல மணிநேர சந்திப்பின் பின்னர் அஞ்சலி அப்பாதுரை தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கட்சி ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

தலைமை பதவிக்கான பிரச்சாரத்தின் போது புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைப்பது குறித்து விசாரணையைத் தொடர்ந்து இந்த முடிவை NDP எடுத்துள்ளது.

இந்த முடிவின் மூலம் British Columbiaவின் புதிய முதல்வரான David Eby பதவி ஏற்கும் நிலை தோன்றியுள்ளது.

வியாழக்கிழமை பிற்பகல் சட்டமன்றத்திற்கு வெளியே ஒரு செய்தியாளர் சந்திப்பைத் திட்டமிட்டுள்ள அஞ்சலி அப்பாதுரை அதுவரை இந்த முடிவு குறித்து கருத்து தெரிவிக்க மாட்டேன் என கூறினார்.

Related posts

கனடாவில் 85 சதவீதமான தகுதியானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்

Gaya Raja

ஐரோப்பாவில் உள்ள நட்பு நாடுகளுக்கு Trudeau பயணம்

Lankathas Pathmanathan

AstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec தயார்!

Gaya Raja

Leave a Comment