கனடா சில கடினமான நாட்களை எதிர்கொள்கிறது என கனடிய துணை பிரதமர் Chrystia Freeland கூறினார்.
ஆனால் பொருளாதாரம் மந்தநிலைக்குள் செல்லும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறதா இல்லையா என்பது எதிர்வ்ரும் இலையுதிர் கால பெருளாதார அறிக்கையில் பிரதிபலிக்கும் என அவர் தெரிவித்தார்.
பொருளாதாரத்திற்கான கணிப்புகளை தனது பொருளாதார அறிக்கையில் கனடிய அரசாங்கம் பகிர்ந்து கொள்ளும் எனவும் நிதி அமைச்சரும், துணைப் பிரதமருமான Freeland கூறினார்.
ஒரு பொருளாதார மந்தநிலையை உலகம் எதிர்கொள்ளவுள்ளது என கூறிய அமைச்சர், வரவிருக்கும் சவாலான நாட்களை கடந்து செல்வதற்கான நிதித் திறனை கனடா கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.