February 22, 2025
தேசியம்
செய்திகள்

ஈரானிய உயர் அதிகாரிகளுக்கு கனடா நிரந்தர தடை

ஈரானிய ஆட்சியின் உயர் அதிகாரிகளுக்கு கனடா நிரந்தர தடை விதித்துள்ளது.

ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் நாட்டிற்குள் வர கனடா நிரந்தரமாக தடை விதித்துள்ளது.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரான் புரட்சிகர காவலர்களை நாட்டிற்குள் நுழைய கனடா தடை விதித்துள்ளது.

ஈரானுடனான நிதி பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்துவதுடன், புதிய அனுமதி அமுலாக்க நடவடிக்கைகளை பின்பற்றவுள்ளதாக பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை (07) அறிவித்தார்.

எதிர்ப்பாளர்கள் மீதான வன்முறை ஒடுக்குமுறை குறித்து ஈரான் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான கண்டனங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

Toronto நகர முதல்வர் வேட்பாளரை மிரட்டிய சந்தேக நபர் கைது

Lankathas Pathmanathan

கனேடிய உதவிப் பணியாளர் உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் பலி

Lankathas Pathmanathan

பாதுகாப்புப் படைத் தலைவராக பதவி ஏற்ற முதல் பெண்

Lankathas Pathmanathan

Leave a Comment