Toronto துணை நகர முதல்வர் Michael Thompson மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இரண்டு பாலியல் வன்கொடுமைக்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் Thompson, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
நடைபெற உள்ள நகரசபை தேர்தலில் Scarborough Centre தொகுதியில் Thompson போட்டியிடுகின்றார்.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் Bracebridge OPPயால் சுமத்தப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவிக்க விசாரணைகளுக்கு ஒத்துழைப்போம் என அவரது வழக்கறிஞர் கூறினார்.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.