கனடிய இராணுவத்தின் தடுப்பூசி நிபந்தனைகளை பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்துகின்றார்.
பல மாத கால ஆய்வுக்கு மத்தியில் உள்ள இராணுவத்தின் தடுப்பூசி நிபந்தனைகள் நியாயமானவை என கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.
ஆயுதப்படை உறுப்பினர்களுக்கான தடுப்பூசி நிபந்தனைகளை வேலைவாய்ப்புக்கான நிபந்தனையாக இராணுவம் தொடர்ந்து பயன்படுத்துவதை Liberal அரசாங்கம் நியாயப்படுத்துகின்றது.
அனைத்து துருப்புக்களும் இரண்டு அங்கீகரிக்கப்பட்ட COVID தடுப்பூசிகளை பெற வேண்டும் என கனேடிய ஆயுதப் படைகள் கடந்த December மாதத்தில் இருந்து வலியுறுத்தி வருகின்றது.
இந்த நிபந்தனையை பின்பற்றாதவர்கள் இராணுவத்திலிருந்து கட்டாயமாக அகற்றப்படுவது உட்பட ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் கூறப்பட்டது.
1,100 இராணுவ உறுப்பினர்கள் இந்த நிபந்தனையை பின்பற்றவில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இதுவரையிலும் தடுப்பூசி போட மறுத்த 299 உறுப்பினர்கள் இராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.