Fiona சூறாவளி 700 மில்லியன் டொலர்கள் வரை இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
300 மில்லியன் முதல் 700 மில்லியன் டொலர் வரை காப்பீடு செய்யப்பட்ட இழப்பை Fiona சூறாவளி ஏற்படுத்தியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொகையானது பிற மாகாணங்களில் ஏற்பட்ட முந்தைய இயற்கை பேரழிவுகளுக்கு நிகரான இழப்பு என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு British Colombia மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் 515 மில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.