December 12, 2024
தேசியம்
செய்திகள்

Conservative கட்சியில் இருந்து விலகும் Quebec நாடாளுமன்ற உறுப்பினர்

Conservative கட்சியில் இருந்து விலகி சுயேச்சை உறுப்பினராக செயல்படவுள்ளதாக Quebec மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Pierre Poilievre கட்சியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த முடிவை நாடாளுமன்ற உறுப்பினர் Alain Rayes எடுத்துள்ளார்.

Rayes, கட்சியின் தலைமை போட்டியில் Jean Charestரை ஆதரித்தவர்.

உறுப்பினர்களின் முடிவை மதிக்கும் அதே வேளையில், “எனது சில அரசியல் இலட்சியங்கள், மதிப்புகள், நம்பிக்கைகள் கட்சியின் புதிய பாதையுடன் ஒத்துப்போகவில்லை.” என தனது முடிவு குறித்து ஒரு அறிக்கையில் Rayes கூறினார்.

Richmond-Arthabaska தொகுதியை தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்துவேன் என அந்த அறிக்கையில் Rayes கூறியுள்ளார்.

Related posts

ஹெய்ட்டியில் உள்ள கனடிய தூதரகம் மூடப்படவில்லை!

Lankathas Pathmanathan

Ontarioவில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் 3,000க்கும் குறைவான தொற்றுக்கள்!

Gaya Raja

தனிமைப்படுத்தல் தேவைகள் இன்றி கனேடியர்கள் இங்கிலாந்திற்கு பயணிக்க முடியும்!

Gaya Raja

Leave a Comment